ETV Bharat / state

எந்த ஹோட்டலில் சாப்பிட்டாலும் காசு கொடுக்காமல் அடிதடியில் ஈடுபடும் திமுகவினர்!' -ஓபிஎஸ் கிண்டல் - non-cottage state

திருவாரூர்: திமுகவினர் எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் காசு கொடுக்காமல் அடிதடியில் ஈடுபடுவதாக திருவாரூரில் மேற்கொண்ட பரப்புரையின்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கிண்டலாக தெரிவித்தார்.

ops
author img

By

Published : Mar 28, 2019, 7:01 PM IST

திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அதிமுக திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளரும், உணவுத் துறை அமைச்சருமான காமராஜ், அதிமுக-பாமக-தேமுதிக கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பரப்புரையின்போது பேசிய ஓபிஎஸ், திமுக-காங்கிரஸ் இடையேயான கூட்டணி அதர்மத்தின் கூட்டணி என்று விமர்சித்தார். 2023ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு, தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.

திமுகவினர் எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் காசு கொடுக்காமல் அடிதடியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய ஓபிஎஸ், ஆனால்அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள்எங்காவது கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பார்த்ததுண்டா? என்று கேள்வி எழுப்பினார்.

2023-ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசை இல்லா மாநிலமாகும் -ஓபிஎஸ்!

Intro:2023-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு, தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என பேரளத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.

Body:திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் துணை முதல்வரும் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சரவணனுக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தை ஈடுபட்டார்.

அப்போது அதிமுக திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளரும் உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ள பாமக,தேமுதிக தொண்டர்கள் ஏராளமானோர் துனை முதல்வரை வரவேற்றனர்.

பிரச்சாரத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது...

தர்மத்தின் பக்கம் நல்லவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணியாகவும், திமுக காங்கிரஸ் அதர்மத்தின் கூட்டணியாகவும் சேர்ந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது.

தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடுகள் கூட பெண்களுக்கு இலவசமாக தாலிக்கு தங்கம் கொடுத்த வரலாறு கிடையாது. ஆனால் அதிமுக 8 கிராம் தங்கம் வழங்கி வருகிறது.

2023-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு, தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்,ஆனால் இந்த திமுக விற்கு நல்லது செய்தாலே பிடிக்காது.

திமுகவினர் எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் காசு கொடுக்காமல் அடிதடியில் ஈடுபடுகின்றனர். ஆனால் எங்காவது அதிமுக தொண்டர்கள் அமைச்சர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பார்த்ததுண்டா? அவ்வாறு ஈடுபட்டது அமைச்சர் என்றாலும் ஜெயலலிதா அவர்களை சிறையில் தள்ளிவிடுவார்கள். அந்த அளவு கட்டுப்பாடாக உள்ளது.

பகிர்ந்து உண்டு வாழ வேண்டும் என்பதைப் போல அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதியை பகிர்ந்து கொண்டுள்ளது.

பாரதப் பிரதமர் மோடி நமது பாரதத்தை பாதுகாப்பாக வழிநடத்தி வருகிறார், மற்ற நாடுகள் எல்லாம் இப்போது இந்தியாவை பார்த்து அஞ்சுகிறது என்றால் அதற்கு மோடியின் அதிகாரமும், நிர்வாகத் திறமையும் தான் காரணம் என்றார்.

ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு மாறுவேடங்களிலும், சைக்கிள் ஓட்டுவது, டிராக்டர் ஒட்டுவது என வலம் வந்தார். பின்னர் டீக்கடையில் டீ குடிப்பது போல் ஏமாற்றி வருகிறார், ஆனால் நாம் டீ கடையை நடத்தி உள்ளோம் ஸ்டாலினின் பாட்சா நம்மிடத்தில் பலிக்காது என பேசினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.