ETV Bharat / state

காற்றின் மொழியில் ''கலைஞர் கோட்டத்தை'' பற்றி அறிந்துகொண்ட மாணாக்கர்கள்! - திருவாரூர் மாவட்ட செய்தி

தஞ்சாவூர் செவித்திறன் குறையுடையோருக்கான பள்ளி மாணவர்கள் திருவாரூரில் உள்ள கலைஞர் கோட்டத்தை சைகை மொழியில் கண்டு ரசித்து உற்சாகமடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 14, 2023, 12:19 PM IST

காற்றின் மொழியில் ''கலைஞர் கோட்டத்தை'' பற்றி அறிந்துகொண்ட மாணாக்கர்கள்!

திருவாரூர்: காட்டூர் கிராமத்தில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் வரலாற்றை பொதுமக்கள் மற்றும் திமுக கட்சியினர் அறிந்து கொள்ளும் வகையில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ''கலைஞர் கோட்டம்'' கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி நடைபெற்றது. இந்த ''கலைஞர் கோட்டம்'' மற்றும் கலைஞர் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள செய்திகளைத் தெரிந்து கொண்டனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து திமுக கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், இலவச மருத்துவ முகாம் உள்ளிட்டப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் தஞ்சாவூரில் மருத்துவ அணி சார்பில் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தஞ்சாவூர் மேம்பாலத்தின்கீழ் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியைச் சார்ந்த ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள், திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள ''கலைஞர் கோட்டத்தை'' சென்று பார்வையிட்டனர்.

அதில் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கலைஞர் கோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் குறித்தும் மற்றும் வரலாற்று செய்திகளையும் அவர்களுக்கு புரியும் வகையில் சைகை மொழியில் தெரிவித்தனர். இவற்றை மாணவர்கள் கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் கலைஞர் கோட்டத்தில் உள்ள நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படித்தனர். அங்குள்ள ஒலி, ஒளி காட்சியுடன் கூடிய திரையரங்கு ஆகியவற்றையும் பார்வையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் அங்குள்ள செல்ஃபி பாயிண்ட்டில் கலைஞருடன் புகைப்படம் உள்ளது போல் மாணவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை சைகை மொழியில் பரிமாறிக் கொண்டனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் பள்ளி மாணவர்களை பாராட்டினர். இது குறித்து தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயரும், மாநில மருத்துவ அணி துணைச் செயலாளருமான டாக்டர் அஞ்சுகம்பூபதி கூறும் போது, ''மாணவர்கள் ஆர்வத்துடன் இவற்றை பார்வையிட்டு வரலாற்று செய்திகளை கேட்டு தெரிந்து கொண்டனர்.

நூலகம், தியேட்டர், அருங்காட்சியகம் ஆகியவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ளவும், சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக கலைஞர் கோட்டம் அமைந்துள்ளது'' என்று தெரிவித்தார்.

மேலும் பள்ளி மாணவி சுஜிபாலா பேசியது, ''இந்தி எதிர்ப்புப் போராட்டம், மற்றும் அனைத்து புகைப்படங்களையும் பார்த்தேன். கலைஞர் எழுதிய நிறைய புத்தகங்கள் மற்றும் நூலகம் ஆகியவற்றைப் பார்த்தோம். கலைஞருடன் நட்பாக இருந்த பேரறிஞர் அண்ணா, பெரியார் ஆகியோரின் புகைப்படங்களைப் பார்த்தோம்'' என்று தனது சைகை மொழியில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

திமுக மருத்துவ அணி சார்பில் பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் சென்ற நிகழ்வு மாணவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செவித்திறன் குறையுடையோருக்கான பள்ளியில் வாய்பேச இயலாத மாணவ, மாணவிகளுக்கும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: Former Minister Kamaraj: சொத்துக்குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 810 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.