ETV Bharat / state

ரூ.20ஆயிரத்திற்கு சிறுமிகளை வேலைக்கு அனுப்பிய பாட்டி உள்பட மூவர் கைது! - old lady arrested for sending child labour in vellakulam

திருவாரூர்: 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, சிறுமிகளை பின்னலாடை நிறுவனத்திற்குப் பணிக்கு அனுப்பிய பாட்டி உள்பட இரு இடைத்தரகர்கள் மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

Grandmother arrested
Grandmother arrested
author img

By

Published : Dec 13, 2019, 6:16 PM IST

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன், தனலட்சுமி தம்பதியின் மகள்கள் கவிதா (13), சங்கீதா (14). தந்தை காலமானதையடுத்து, தாய் தனலட்சுமி, சிறுமிகள் இருவரும் பாட்டி விஜயலட்சுமியுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், விஜயலட்சுமியின் குடும்ப வறுமையின் காரணமாக, சிறுமிகள் இருவரையும் பணிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளார்.

அப்போது, நீடாமங்கலத்தைச் சேர்ந்த சகுந்தலா, கனகம் ஆகிய இரு இடைத்தரகர்கள் விஜயலட்சுமியைச் சந்தித்து கோயம்புத்தூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணிவாங்கித் தருவதாகக் கூறி, முன் பணமாக 20 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட விஜயலட்சுமி இரு பேத்திகளையும் பணிக்கு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளக்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பாட்டி விஜயலட்சுமி, இடைத்தரகர்கள் சகுந்தலா, கனகம் ஆகிய மூவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிந்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல் நிலையம்

இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் துரை உத்தரவின் பேரில், சிறுமிகளை மீட்க தனிப்படை அமைத்து இரு உதவி காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான காவலர்கள் கோவை சென்றுள்ளனர். மேலும் இரு சிறுமிகளும் இன்று இரவுக்குள் மீட்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:

ஆசிய விளையாட்டு போட்டியில் 73வயது மூதாட்டி பதக்கம் வென்று சாதனை...!

Intro:Body:
கோயம்புத்தூரில் இயங்கி வரும் பின்னலாடை நிறுவனத்திற்கு சிறுமிகளை
வேலைக்காக ரூபாய் 20000 பணத்திற்கு விற்ற சிறுமிகளின் பாட்டி மற்றும்
இடைத்தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து திருவாரூர் காவல்துறையினர்
நடவடிக்கை.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர்
காளியப்பன் இவரது மகளான கவிதா (13) மற்றும் சங்கீதா (14)ஆகியோரை அவரது
பாட்டி விஜயலட்சுமி குடும்ப வறுமை காரணமாக கோயம்புத்தூர்
புளியம்பட்டியில் இயங்கிவரும் மகாமேரூர் ஸ்பின்னிங் மில் என்ற பின்னலாடை
நிறுவனத்திற்கு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சேர்ந்த சகுந்தலா,
கனகம் ஆகிய இடைத்தரகர்கள் மூலமாக வேலைக்காக முன்பணமாக ரூபாய் 20,000 பெற்றுக்கொண்டு இரண்டு சிறுமிகளை வேலைக்கு அனுப்பி உள்ளனர். இதனையடுத்து
வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் குடவாசல்
காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு சட்டத்தின் கீழ் பாட்டி விஜயலட்சுமி ,இடைத்தரகர்கள் சகுந்தலா மற்றும் கனகம் ஆகிய 3 பேர் மீது குடவாசல் காவல் நிலையத்தில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.