ETV Bharat / state

நர்ஸ் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்துவிட்டதா? - நர்ஸ் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்துவிட்டதா

திருவள்ளூர்: பூவிருந்தவல்லியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு செவிலி பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

protest
protest
author img

By

Published : Mar 2, 2020, 4:02 PM IST

பூவிருந்தவல்லியை அடுத்த குமணன்சாவடி, கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி, இவரது மனைவி நஸ்ரின் கர்ப்பமாக இருந்துள்ளார். நஸ்ரினுக்கு நேற்று மதியம் பிரசவ வலி ஏற்பட்டதால், பூவிருந்தவல்லியில் உள்ள அரசு தாய்சேய் நல ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பிரசவம் பார்ப்பதற்குரிய மருத்துவர்கள் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த செவிலி ஒருவர் நஸ்ரினுக்கு பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது. நஸ்ரினுக்கு நேற்றிரவு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் நஸ்ரினின் உறவினர்களிடம் தெரிவித்தனர்.

மருத்துவமனை முற்றுகை

பிரசவத்தின்போது உரிய மருத்துவர்கள் இல்லாமல், செவிலி பிரசவம் பார்த்ததால்தான் குழந்தை இறந்துவிட்டதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை வைத்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

இச்சம்பவத்தையடுத்து பூவிருந்தவல்லி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல் துறை நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தமீம் அன்சாரி கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் இது குறித்து விசாரணை செய்துவருகின்றனர். மேலும் இறந்துபோன குழந்தையின் உடலை உடல்கூறாய்வு செய்ய காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனிடையே, நஸ்ரினுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: மருத்துவர் நியமனத்தில் முறைகேடு: பேரவை துணைத் தலைவரே புகாரளித்ததால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.