திருவாரூர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தத்தின் கீழ் துப்புரவுப் பணியாளர்கள், காவலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், தங்களுக்கு ஒப்பந்த நிர்வாகம் மாத ஊதியம் ரூ.18,000 வழங்கவும், வார விடுமுறை, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை முன்பு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.