ETV Bharat / state

‘கரோனா விவகாரத்தை ஸ்டாலின் அரசியல் ஆக்கக்கூடாது’ - அமைச்சர் காமராஜ் வலியுறுத்தல் - mk stalin vs minister kamaraj

திருவாரூர்: கரோனா விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எதார்த்தமாகப் பேசியதை திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆக்கக்கூடாது என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

காமராஜ்
காமராஜ்
author img

By

Published : Jun 23, 2020, 7:28 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள செருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு முழுவதும் எந்தெந்த பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைப்படுகிறதோ அவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கலாம்.

டெல்டா மாவட்டங்களில் மட்டும் 352 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், டெல்டா அல்லாத பிற மாவட்டங்களில் 200 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 552 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

விவசாயிகளிடமிருந்து புகார்கள் வராத அளவிற்கு நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகார்கள் ஏதும் வருமாயின் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அதனடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் காமராஜ் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் கரோனா எப்போது ஒழியும் என்ற கேள்விக்கு அது கடவுளுக்குத்தான் தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதார்த்தமாகக் கூறியதை, திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலாக்கக் கூடாது. கரோனா எப்போது ஒழியும் என்பது உலக தலைவர்களுக்கோ, பிற தலைவர்களுக்கோ, யாருக்கும் தெரியாத நிலையில் ஸ்டாலினுக்கு மட்டும் கரோனா எப்போது அழியும் என்பது தெரியுமா?” என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.