ETV Bharat / state

டாஸ்மாக்  மதுப்பாட்டில்களைக் கடத்திய ஐந்து பேர் கைது!

author img

By

Published : Jul 13, 2020, 9:50 PM IST

திருவாரூர்: டாஸ்மாக் மதுபானப் பாட்டில்களைக் கடத்திய 5 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

டாஸ்மாக் பாட்டில்களை கடத்திய ஐந்து பேர் கைது!
Five persons arrested for rob tasmac bottles

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து ராமநாதபுரம் அரசு மதுபான கிடங்குக்கு, சுமார் 1,100 மதுப்பாட்டில்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

லாரி நேற்று முன்தினம்(ஜூலை 11) புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதாக லாரி ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வாகனச் சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில், அந்த வழியாக வந்த கார், ஒரு டெம்போ வேனை மறித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், விபத்துக்குள்ளான லாரியிலிருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டாஸ்மாக் மதுபானப் பாட்டில்களை டெம்போவில் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, டாஸ்மாக் லாரி ஓட்டுநர்கள் குணசேகரன், அரவிந்த், அவர்களுக்கு உதவியாக செயல்பட்ட வீரக்குமார், நாகராஜ், குணசேகரன், அரவிந்த் ஆகிய 5 பேரை நன்னிலம் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து, அவர்களிடமிருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டாஸ்மாக் மதுபானப் பாட்டில்கள், ஒரு கார், ஒரு டெம்போ வேனை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.