ETV Bharat / state

டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! - tasmac shop bill

ராணிப்பேட்டையில் டாஸ்மாக்(TASMAC) மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கப்பட்டது மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசீது உடன் விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்
ரசீது உடன் விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 12:22 PM IST

ராணிப்பேட்டை: தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனையை அரசே நடத்துகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 4900 கடைகளில் மதுபான விற்பனையானது நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த பிரச்சனையால் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் - விற்பனையாளர்கள் இடையே வாக்குவாதம், மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் அவ்வப்போது நடந்தேறியது. இதற்கு தீர்வு காணும் வகையில் டாஸ்மாக் கடைகளை மேலும் நவீனமயமாக்குவதோடு கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறையை அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டது.

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குகள், மது பாட்டில்களில் பார்கோட் அச்சிட்டு அதன் மூலம் கண்காணித்த உள்ளிட்ட பணிகளில் டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: 9 ஆயிரம் கோடி முதலீடு, 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்!

டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினி மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பில்லிங் முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கையடக்க ஸ்கேனர் மூலம் ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள கலால் வரியுடன் கூடிய லேபிள்களை ஸ்கேன் செய்து பில் ரசீதுகளை வாடிக்கையாளரிடம் வழங்குகின்றனர்.

அந்தவகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 83 டாஸ்மாக் கடைகளில், வாணாபாடி, லாலாப்பேட்டை, வன்னிவேடு, தாஜ்புரா, நந்தியாலம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஏழு கடைகளில் மதுபாட்டில்களை ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்களுக்கு பில் வழங்கப்பட்டது.

இதில், மது பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டுவரப்பட்டது உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொள்ள முடியும் என்பதால் மகிழ்ச்சி அளிப்பதாக மதுப்பிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.