திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த மாடுகளை அதன் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்காமல் பேருந்து நிலையம், முக்கிய கடைவீதிகள், பிரதான சாலைகள், பள்ளி, கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் விட்டுவிடுகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் கால்நடைகள் மீது மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நகரப்பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.