ETV Bharat / state

குடிபோதையில் தகராறு செய்த மகனைக் கொன்ற தந்தை!

author img

By

Published : Jul 12, 2021, 1:52 PM IST

திருத்துறைப்பூண்டி அருகே குடி போதையில் தகராறில் ஈடுபட்ட மகனை, தந்தையே கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

police enquiry  father murder his son  thiruvarur father murder his son  murder news  thiruvarur news  thiruvarur latest news  crime news  குற்றச் செய்திகள்  திருவாரூர் செய்திகள்  திருவாரூரில் மகனை கொன்ற தந்தை  மகனை கொன்ற தந்தை  கொலை வழக்கு  father attacked and murder son in thiruvarur  திருத்துறைப்பூண்டியில் தந்தையே மகனைக் கொன்ற சம்பவம்
தந்தையே மகனைக் கொன்ற சம்பவம்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி, பெரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சஞ்சீவ் காந்தி (37) அடிக்கடி மது அருந்தி வந்து, தனது தந்தை பாலுவிடம் (65) தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஜூலை.13) காலை சஞ்சீவ் காந்தி வழக்கம்போல் மது அருந்திவிட்டு தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பாலு தன்னுடைய மகன் சஞ்சீவ் காந்தியை உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தியுள்ளார்.

அதில் சஞ்சீவ் காந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த திருத்துறைப்பூண்டி காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று சஞ்சீவ் காந்தியின் உடலை மீட்டனர்.

பின்னர் அவரது உடலை உடற்கூராய்விற்காக திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குடிசை இடிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.