ETV Bharat / state

சம்பா விதை நெல் தட்டுப்பாடு; விவசாயிகள் கவலை! - திருவாரூர் அண்மைச் செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா விதை நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விவசாயிகள் பேசுவது தொடர்பான காணொலி
விவசாயிகள் பேசுவது தொடர்பான காணொலி
author img

By

Published : Oct 8, 2021, 4:39 PM IST

திருவாரூர்: திருவாரூர் முழுவதும் இந்தாண்டு 1 லட்சத்து 76 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியை நிறைவு செய்துள்ளனர்.

சாகுபடி பணிகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, அடுத்த சம்பா சாகுபடிக்காக நிலத்தை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

விவசாயிகள் பேசுவது தொடர்பான காணொலி

விதை நெல் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை?

இந்நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் வேளாண் கூட்டுறவு மையத்தில் சம்பா சாகுபடிக்கான விதை நெல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் வியாபாரிகளிடமும் நெல் விதைகள் இருப்பு இல்லாததால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் பேசுகையில், “குறிப்பிட்ட காலத்தில் சம்பா சாகுபடிக்கான நெல் விதைகள் தெளிக்கப்பட்டால் மட்டுமே, பயிர்கள் தழைக்கும். காலம் தவறி நெல் விதைகள் விதைக்கப்பட்டால், முளைக்கும் பயிர்கள் வரவிருக்கும் மழைக்காலத்தில் நீரில் முழ்கி அழுகும் நிலை உருவாகும்.

ஆகையால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அனைத்து வேளாண் கூட்டுறவு மையங்கள் மூலமாக விதை நெல் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து மீண்டும் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு போதுமன அளவு விதை நெல்களை இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: 27 புரோட்டா, 1 சிக்கன் ரைஸ் சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.