திருவாரூர் மாவட்டம் மாங்குடி கிராமங்களில் சென்ற இரண்டு ஆண்டுகளாக ஆனைகொம்பன் பூச்சி தாக்குதலால் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர் பாதிக்கப்பட்டது. இதனிடையே பயிர் காப்பீட்டு நிறுவனம் பிரீமியம் கட்டிய சில விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்காப்பீட்டுத் தொகை வழங்கியது.
இது குறித்து பலமுறை விவசாயிகள் வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மாங்குடி கடைத்தெருவில் விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி தலைமையில் பயிர்காப்பீடு தொகை வழங்காத அரசை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் பயிர்காப்பீட்டு தொகை வழங்காமல் விவசாயிகளைப் பழிவாங்கும் நிறுவனத்தைக் கண்டித்தும், உடனடியாக விடபட்ட மாங்குடி விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டுத் தொகையை தர அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.