திருவாரூர் : 2019-20ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, மன்னார்குடியில், தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் 100க்கும் மேற்ப்பட்டோர் ஒன்றிணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு ஆணைக்கொம்பன் நோயால் பயிர்கள் பாதிப்புகுள்ளாகியிருந்த நிலையில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் 2019-20ஆம் ஆண்டுக்கு பயிர் காப்பீடு செய்தும், மன்னார்குடி ஒன்றியம் முழுவதும் உள்ள 24 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கபடவில்லை.
எனவே தங்களுக்கு உடனடியாக பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 100க்கும் மேற்ப்பட்டோர் இணைந்து, மன்னார்குடி நகராட்சியிலிருந்து பேரணியாகச் சென்றனர்.
தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்த அவர்கள், தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.