டெல்டா மாவட்டங்களில் ஒஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கொண்டு செல்வதற்காக சில விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது .
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம், கோட்டூர் பகுதியில் 14க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து ஒஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எரிவாயு, மீத்தேன் எடுப்பதற்கு ஆய்வு செய்ய வந்ததைக் கூறாமல், மணல் ஆய்வுக்கு நிலத்தை அளக்க வந்திருப்பதாக பொய் கூறி, விவசாயிகளிடம் கையெழுத்தைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
தற்போது தங்கள் விளைநிலங்களில் ஒஎன்ஜிசி நிறுவனம் ராட்சத இயந்திரங்களையும், கனரக வாகனங்களையும் கொண்டு ஆக்கிரமித்துள்ளது என்றும் நிலங்களை அபகரித்தது மட்டுமல்லாமல் தங்களையும் மிரட்டி வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் விளைநிலங்களை ஒஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து மீட்டுத்தரவேண்டும் என விவசாயிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் மனு அளித்துள்ளனர்.
இதையும் படியுங்க:
விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு!