ETV Bharat / state

நீதிமன்ற தீர்ப்பால் திணறும் டெல்டா விவசாயம்: அதிர்ச்சியில் விவசாயிகள் - டெல்டா விவசாயிகள்

அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பாசனத்திற்காக நீரை எடுத்தால் விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரத்தை ரத்துசெய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு வழங்கப்படும் விவசாய இடுபொருள்களை வழங்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிட்டுள்ளது டெல்டா விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் தினறும் டெல்டா விவசாயம்: அதிர்ச்சியில் டெல்டா விவசாயிகள்

author img

By

Published : Jan 13, 2022, 6:24 PM IST

திருவாரூர்: தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் வாழ்ந்துவருகின்றனர். மேலும் விவசாயம் சார்ந்து ஜவுளி வியாபாரம், நகை வியாபாரம் முதலான பெரிய நிறுவனங்கள் தொடங்கி தேநீர்க் கடை, பெட்டிக் கடை வரை உள்ள சிறிய நிறுவனங்களும் பிழைப்பு நடத்திவருகின்றனர்.

பயிரைக் காப்பாற்றப் போராடும் விவசாயிகள்

இப்படிப்பட்ட விவசாயத் தொழிலுக்கு முக்கியமானது நீர் ஆதாரம். இத்தகைய நீர் அதிகமாக இருந்தாலும் ஆபத்து குறைவாக இருந்தாலும் ஆபத்து என்ற நிலையில் விவசாயிகள் பல்வேறு நிலைகளில் மழை, வெயில், குளிர் எனப் பல்வேறு தட்பவெட்ப நிலைகளில் பாடுபட்டு நெல்லை உற்பத்தி செய்வதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்திவருகின்றனர்.

நாட்டின் பொருளாதார காரணிக்கு முக்கியப் பங்காற்றும் விவசாயத்தைக் காப்பாற்ற அரசு விவசாயிகளுக்கு உரம், விதை நெல், பூச்சிகொல்லி மருந்து உள்ளிட்டவைகளை மானியத்திலும், முழு மானியத்திலும் வழங்கிவருகிறது.

குறிப்பாக மழை அதிகம் பெய்தாலோ, அதிகமழையினால் ஏற்படும் வெள்ளத்தாலோ சாகுபடி வயல் வரப்பில் நீர் தேங்கினால் அதனை வடியவைத்துப் பயிரைக் காப்பாற்றிடப் போராடுகின்றனர். போதிய மழையின்றி பாசனத்திற்கு நீர் கிடைக்காத நிலையில் ஆறு, வாய்க்கால்களில் தேங்கிக் கிடக்கும் நீரைத் தேவைக்கு ஏற்ப ஆயில் இன்ஜினை கொண்டோ அல்லது இறைகூடை மூலமாகவோ இறைத்து பயிருக்கு உயிரோட்டத்தைத் தந்துவருகின்றனர்.

டெல்டா விவசாயத்தைப் பாதிக்கும் நீதிமன்றத் தீர்ப்பு

ஆனால் தற்போது இதற்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பாசனத்திற்காக நீரை எடுத்தால் விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரத்தை ரத்துசெய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு வழங்கப்படும் விவசாய இடுபொருள்களை வழங்கக் கூடாது என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, விவசாயிகளை கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ந்துபோய் உள்ளனர். இது குறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி டெல்டா பாசன பாதுகாப்புச் சங்கத் தலைவர் சாமிநாதன் கூறுகையில், ”சாகுபடிக்கு நீர் பற்றாக்குறை காலங்களில் அனைத்துத் தரப்பினருக்கும் தெரிந்துதான் ஆறு, வாய்க்கால்களிலிருந்து ஆயில் இன்ஜின் மூலமாகவோ, இறைகூடை மூலமாகவோ நீரை எடுத்துப் பயிருக்கு உயிர் நீர் கொடுத்துவருகிறோம்.

நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பால் வருங்காலங்களில் டெல்டா விவசாயம் என்பது முற்றிலும் அழிந்துபோகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்ந்த உழவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் விவசாயம் பொய்த்துபோகும் என்ற பெரும் கேள்வியோடு பட்டினி சாவும் ஏற்படக்கூடிய பேராபத்தும் எழுந்துள்ளது” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தாலிக்கு தங்கம் தர லஞ்சம் வாங்கி ஏமாற்றிய அலுவலர் முற்றுகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.