தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று(நவ.18) திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டிவந்த நிலையில் இன்று(நவ.19) நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொல்லுமாங்குடி, பேரளம், பவட்டகுடி சங்கமங்கலம், பழையாறு, வேலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்ததை தொடர்ந்து திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இந்த பருவமழையால் சம்பா தாளடி பணியில் ஈடுபட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஐந்து நட்சத்திர விடுதி தரத்தில் காவல் நிலையம்!