ETV Bharat / state

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Jan 30, 2020, 1:58 PM IST

திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்புச் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். கிராமசபை கூட்டத்திலும் இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

இந்நிலையில் இன்று இந்த ஆண்டிற்கான முதல் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி தேவையில்லை, அப்பகுதி மக்களிடம் கருத்துக்கேட்பு தேவையில்லை என அறிவித்திருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மேலும், டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது எனவும் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: குறைதீர் கூட்டத்தில் கறுப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் கண்டன கோஷம்!

Intro:

Body:திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கிராமசபை கூட்டத்திலும் இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.

இந்நிலையில் இன்று இந்த ஆண்டிற்கான முதல் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி தேவையில்லை, அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்பு தேவையில்லை என அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

மேலும் டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது எனவும், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையிலான நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.