நன்னிலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் சம்பா, தாளடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் முறை வைத்து தண்ணீர் திறந்து விடுவதால் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக திருக்கொட்டாரம், வேலங்குடி, மாத்தூர், பழையாறு, கமுகக்குடி உள்ளிட்டப் பகுதிகளில் சிறு குறு விவசாயிகள் சம்பா பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தண்ணீர் இல்லாமல் வெளி வாய்க்கால், வயல்களிலிருந்து தண்ணீர் கொண்டு சென்று ஊற்றி, சேற்றில் நடவுப் பணிகளை மேற்கொள்ளும் அவலம் நீடித்து வருகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களிலும் பெய்து வரும் நிலையில், நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் குறைவாகவே மழை பெய்ததால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நாட்டாற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆபத்தான வளைவுகளில் பொருத்தப்பட்ட குவிலென்ஸ் கண்ணாடிகள்!