திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடந்துவந்த நிலையில், தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக திருக்கொட்டாரம், வேலங்குடி பழையாறு, மாத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் அறுவடை தீவிரமாக நடைபெறுகிறது. அறுவடை பணிகள் தொடங்குவதற்கு முன்னரே அப்பகுதியில் குறுவை கொள்முதல் நிலையம் அமைத்து வெளிமாவட்ட நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது, அறுவடை பணி நடந்துவரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், விவசாயிகளிடம் நெல்லை விற்றால் தங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படுவதாகவும் புலம்பத்தொடங்கியுள்ளனர்.
தங்களின் நலனைக் கருத்தில் கொண்டு மூடப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து நெல் கொள்முதல் செய்யவேண்டும் என்றும் உடனடியாக இவ்விகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிடவேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஏரியை சொந்த செலவில் செப்பனிட முயன்ற மக்கள் - தடுத்து நிறுத்திய அரசு அலுவலர்கள்!