ETV Bharat / state

நெல் கொள்முதல் நிலையத்தில் அரசின் புதிய ஆன்லைன் முறையால் விவசாயிகள் அவதி - ஆன்லைன் முறையால் விவசாயிகள் அவதி

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆன்லைன் விற்பனை முறைக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையத்தில் அரசின் புதிய ஆன்லைன் முறையால் விவசாயிகள் அவதி

author img

By

Published : Jan 23, 2022, 8:13 PM IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா தாளடிக்கான அறுவடை பணிகள் தொடங்கித் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருவது வழக்கம்.

ஆன்லைன் முறையால் அவதி

ஆனால் தற்போது பழைய முறையை நடைமுறையில் இல்லாததால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். தற்போது தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்வதற்கு முன்பு ஆன்லைன் மூலம் பதிவு செய்த பிறகே நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் சிறு குறு விவசாயிகள் அதிகமாக விவசாயம் செய்வதால் அனைவருக்கும் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவது என்பது சிரமமாக உள்ளது. அதேபோல் ஆன்லைன் பதிவு முறையில் பதிவு செய்யும் போது நெட்வொர்க் பிரச்சினைகள் அடிக்கடி வருவதாலும் விவசாயிகளுக்கு காலதாமதம் ஏற்ப்படுவதால் பழைய முறையை நடைமுறைபடுத்தினால் எளிதாக இருக்கும் எனத் தெரிவித்தனர்.

நெல் கொள்முதல் நிலையத்தில் அரசின் புதிய ஆன்லைன் முறையால் விவசாயிகள் அவதி

போராட்டம் நடத்த நேரிடும்

பழைய முறையில், டோக்கன் போட்டப் பின் அடுத்த இரண்டு நாள்களில் நெல்லை கொள்முதல் செய்து பிறகு ஒரு வாரத்திற்கு பின் விவசாயிகள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

ஆனால் தற்போது ஆன்லைன் முறை என்பதால் அதை பதிவு செய்வதற்கே ஒவ்வொரு வாரங்களைக் கடந்து செல்வதால் அதுவரை நெல் மூட்டைகளை வீட்டில் அடுக்கி வைத்து காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறி வருகின்றனர்.

எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்க உள்ளோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு - கால அட்டவணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.