ETV Bharat / state

'வேளாண் காப்பீட்டு நிறுவனங்களைக் கண்டித்து போராட்டம்' - பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு

author img

By

Published : Aug 30, 2020, 8:11 PM IST

திருவாரூர்: வேளாண் காப்பீடு நிறுவனத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்து செப்டம்பர் 8ஆம் தேதி டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

பி.ஆர். பாண்டியன்
பி.ஆர். பாண்டியன்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 2019-20ஆம் ஆண்டில் சம்பா பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு தற்போது வேளாண் காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்கி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 763 வருவாய் கிராமங்களில் 527 கிராமங்களுக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 514 வருவாய் கிராமங்களில் 147 கிராமங்களுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 573 வருவாய் கிராமங்களில் 360 கிராமங்களுக்கும் தன் விருப்பு வெறுப்பிற்கேற்ப இழப்பீடு நிர்ணயம் செய்துள்ளனர். மீதமுள்ள 916 கிராமங்களுக்கு இழப்பீடு சுழியம் என கணக்கிட்டு மோசடி செய்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் அனைத்து கிராமங்களிலும், ஆணை கொம்பன் நோய் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டது நிலமை இவ்வாறு இருக்க காப்பீட்டு நிறுவனம் தன் விருப்பத்திற்கு இழப்பீடு நிர்ணயம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது.

இதைக் கண்டித்து இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரியும் அனைத்து கிராமங்களுக்கும் இழப்பீடு வழங்கக்கோரியும் வருகின்ற செப்டம்பர் 8ஆம் தேதி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழக விவசாயிகள் சங்கம் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளது.

மேலும், திருவாரூரில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் ஒப்புக்கொண்ட அடிப்படையிலும், உயர் நீதிமன்றம் புதிய நடைமுறைக்கு தடை விதித்துள்ளதைப் பின்பற்றி பழைய நடைமுறையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்துகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு: ஞாயிற்றுக்கிழமைகளுக்கு தளர்வு; பேருந்துகள் இயங்க அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.