திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள், நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம்வரை மருத்துவம் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த மருத்துவமனையில் புற நோயாளிகள் 500க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மருத்துவக் கல்லூரி எதிர்புறம் உள்ள கடைகளில்தான் காலை உணவு, மதிய உணவு டீ, பிஸ்கட், பிரட் பாக்கெட்டுகள் அனைத்தையும் வாங்கிச் செல்கின்றனர். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமரனுக்கு அந்த கடைகளில் காலாவதியான பிரட் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது.
இதையடுத்து கடைகளுக்குச் சென்று சோதனை செய்ததில், காலாவதியான பிரட் பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த ஊழியர்கள் அவற்றை குப்பைத் தொட்டியில் வீசினர். பின்னர், இதுபோல் காலாவதியான பிரட் பாக்கெட்டுகள் விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: கரோனா தொற்று: பிரதமரிடம் நிதி கேட்டு நாராயணசாமி கடிதம்