திருவாரூர்: நன்னிலம் அருகேவுள்ள அகர கொத்தங்குடி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராம மக்கள் விவசாயத்திற்காக வெட்டாற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த ஆற்றின் கரை ஓரமாக பேரளம் பேரூராட்சியைச் சேர்ந்த சிலர் இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டப்பட்டு, எரிக்கப்பட்டு வந்தனர்.
இதனால், அதன் அருகிலுள்ள கொத்தங்குடி கிராம மக்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து பாதிப்புகள் குறித்து கடந்த 15ஆம் தேதி நமது ஈடிவி பாரத் செய்தியாளர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து, விவசாயிகளின் வேதனையை பதிவுச் செய்தார்.
கழிவுகள் அகற்றம்
இந்தச் செய்தி நமது ஈடிவி பாரத் தளத்தில் வெளியாகிய நிலையில் இந்தச் சம்பவம் மாவட்ட நிர்வாகம், பேரளம் பேருராட்சி நிர்வாகத்தினர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
பின்னர், பேருராட்சி அலுவலர்கள் உடனடியாக ஜேசிபி இயந்திரம் கொண்டு அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகள், கழிவுகள், மருத்துவக் கழிவுகள் ஆகியவற்றை அகற்றினர்.
இதனைக் கண்ட அகர கொத்தங்குடி கிராம மக்கள், இது குறித்து செய்தி வெளியிட்ட ஈடிவி பாரத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆற்றில் கொட்டப்படும் மருந்துக் கழிவுகள் - நடவடிக்கை எடுக்குமா அரசு?