திருவாரூர்: நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் (ஜூன்) 12ஆம் தேதி நீர் திறக்கப்பட்டது. இதனை நம்பி நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளான வலங்கைமான், குடவாசல், நன்னிலம், பூந்தோட்டம், கொல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை பயிர்கள் விதைக்கப்பட்டன.
ஆனால் பொதுப்பணித்துறை அலுவலர்கள் முறைவைத்து நீர் திறந்துவிடுவதால், உரிய நேரத்தில் நீர் கிடைக்காமல் குறுவை பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
பலமுறை பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிவிக்கின்றனர். மேலும், தங்களது வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பயிர்க் காப்பீடு குறித்து விவசாயிகள் கோரிக்கை!