ETV Bharat / state

வாழ்வாதாரத்தை இழந்த நாடகக் கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு! - நாடக கலைஞர்கள்

தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட நேரம் மட்டுமே திருவிழாக்களை நடத்த அனுமதித்துள்ளது. எங்கள் நாடகம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை. திருவிழா தொடர்பான தமிழ்நாடு அரசின் தடை நீடித்தால் எங்களுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும்.

நாடகம் நடத்த அனுமதி கோரி நாடகக் கலைஞர்கள் மனு!

author img

By

Published : Apr 12, 2021, 3:32 PM IST

திருவாரூர்: கோவில் திருவிழாக்களில் நாடகங்கள் நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் நாடகக் கலைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடகக் கலைஞர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் சிவன், பார்வதி, எமதர்மன், ராமர், சீதை, லெட்சுமனர் உள்ளிட்ட வேடங்கள் அணிந்து வந்து மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நாடகம் நடத்த அனுமதி கோரி நாடகக் கலைஞர்கள் மனு!
நாடகம் நடத்த அனுமதி கோரி நாடகக் கலைஞர்கள் மனு!
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாடக கலைஞர்கள், கோவில் திருவிழாக்கள் தடைபடுவதால் நாடகங்கள் தடைபடுகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட நேரம் மட்டுமே திருவிழாக்களை நடத்த அனுமதித்துள்ளது. எங்கள் நாடகம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை. திருவிழா தொடர்பான தமிழ்நாடு அரசின் தடை நீடித்தால் எங்களுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும்.

நாடகக் கலைஞர்கள் நாங்கள் நலிவுற்ற நிலையில் இருக்கிறோம். அரசு ஆவன செய்யவில்லை என்றால், இந்த நாடகக் கலை அழிந்துபோகும். எனவே தகுந்த இடைவெளியுடன் நாடகத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.