ETV Bharat / state

குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீர்; தொற்றுநோய் ஏற்படும் அபாயம்! - Thiruvarur

திருவாரூர்: சாக்கடை நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து தொற்றுநோய் ஏற்படும் அபாயம், திருவாரூர் பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

சாக்கடை நீர்
author img

By

Published : May 17, 2019, 6:30 PM IST

திருவாரூர் மாவட்டம், பழைய நாகை சாலைப் பகுதியைச் சுற்றி பள்ளிகள், கோயில்கள், திருமண மண்டபங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சாக்கடை கழிவு நீர் வழிந்து சாலைகளில் ஓடுகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் சாக்கடை நீர் புகுந்துள்ளது. இதனால், பெண்களும், குழந்தைகளும், வேலைக்குச் செல்வோரும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

நகராட்சி கவனிக்குமா?

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "கழிவுநீர் தொடர்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. சாக்கடைக் கழிவால் தொற்றுநோய் ஏற்பட்டு உயிர் பலி நேர்ந்தால்தான் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா என்று தெரியவில்லை?" என்று வேதனை தெரிவித்தார்.

Intro:திருவாரூரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து சாலைகளில் ஓடுவதால் அப்பகுதியில் தொற்றுநோய் ஏற்படும் அபாயம். பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு.

Body:திருவாரூரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து சாலைகளில் ஓடுவதால் அப்பகுதியில் தொற்றுநோய் ஏற்படும் அபாயம். பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு.

திருவாரூரில் முக்கிய நகர் பகுதியான பழைய நாகை சாலைப் பகுதி உள்ளது. இந்த பகுதியை சுற்றி பள்ளிகள், கோயில்கள், திருமண மண்டபங்கள் உள்ளதால் பெருமளவில் பொதுமக்கள் இப்பகுதியை பயன்படுத்துகின்றனர்.

இப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் ஒருவாரத்திற்கு மேலாக வழிந்து சாலைகளில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெரும் அளவில் துர்நாற்றம் வீசுவதோடு கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல், தொற்று நோய்கள் குழந்தைகளை எளிதில் தாக்கும் அபாயம் ஏற்படுகிறது.

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இந்த சாக்கடைக் கழிவால் தொற்று நோய் ஏற்பட்டு உயிர் பலி நேர்ந்தால் தான் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா? என வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.