கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் ஊரடங்கு தற்போது வரை அமலில் இருந்து வரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழக்கை கேள்விக்குறியாகி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இசைக் கலைஞர்களுக்கு தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கால் கோயில் திருவிழா நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், இவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், 250 இசைக் கலைஞர்களின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு, கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கினார்.
அப்போது, திருவாரூர் மாவட்ட திமுக இளைஞரணி துணை செயலாளர் ரஜினி சின்னா, முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.