தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின் பேரில், திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, திருவாரூர் மாவட்ட உதவி ஆட்சியர் கிஷோர் திருத்துறைப்பூண்டியிலுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், தங்களுக்குச் சொந்தமான பகுதிகளில் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் விதமாக வைத்திருந்த வீடுகள், வணிக நிறுவங்களுக்கு ரூ.87 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், குடியிருப்புப் பகுதிகளில் டயர், தேங்காய் மட்டை, பிளாஸ்டிக் டப்பா ஆகியவற்றில் நீர் தேங்கி, டெங்கு கொசு உற்பத்தியாகாத வகையில் பொதுமக்கள் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் இந்த ஆய்வில் அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: அரசு மதுபான கடைக்கு டெங்குவால் வந்த சோதனை