ETV Bharat / state

திருவாரூரில் தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Sep 15, 2020, 3:39 PM IST

திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் எதிரில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு போக்குவரத்து ஓய்வுபெற்ற நல அமைப்புச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது 2019 செப்டம்பர் 24 போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளரின் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை அமல்படுத்திட வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனே அமல்படுத்திட வேண்டும், 56 கால அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும்,

மேலும் 2019 ஏப்ரல் மாதம் முதல் பணியில் இருந்து உயிரிழந்தவர்களுக்கு குடும்பநல நிதியாக தலா 3 லட்சம் உடனடியாக வழங்கிட வேண்டும், ஒப்பந்த உயர்வுகளின் அடிப்படையில் ஓய்வூதியத்தை மாற்றி அமைத்திட வேண்டும், 2009ஆம் ஆண்டு ஓய்வூதிய சீராய்வுக் குழு அறிக்கையின்படி ஓய்வூதியத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.