வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி திருவாரூர், தஞ்சாவூர், நாகை, கடலூர், தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழை பெய்து வந்த நிலையில், இன்றும் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது அதன்படி,
- திருவாரூர் மாவட்டம்: நன்னிலம், குடவாசல், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி.
- கடலூர் மாவட்டம்: விருத்தாச்சலம், திட்டக்குடி, நெய்வேலி.
- நாகை மாவட்டம்: சீர்காழி, வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில்.
- தஞ்சாவூர் மாவட்டம்: கும்பகோணம், ஆடுதுறை, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், தாராசுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
- தேனி மாவட்டம்: பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியின் சில பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்ந்த நிலை நிலவி வருவதாலும், குளங்களில் நீர் பெருகுவதாலும் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: "டிவி பார்ப்பேன், டான்ஸ் ஆடுவேன், பேசுவேன்" - அசத்தும் கிளியின் பேச்சு!