மத்திய அரசானது மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறது.
கடந்த சில நாள்களாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளானர். எனவே பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரில் இந்திய தேசிய மாதர் சம்மேளத்தின் சார்பில் சிலிண்டர் உருளைக்கு மாலை அணிவித்து ஓப்பாரி வைத்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சிலிண்டர் விலை உயர்வு: ஒப்பாரி வைத்து மாதர் சங்கத்தினர் போராட்டம்