ETV Bharat / state

மன்னார்குடியில் வெள்ளம் - பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் தவிப்பு! - புரெவி புயல்

திருவாரூர்: மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் பகுதிகளில் ஆறாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமானது.

சேதநிலையில் பயிர்கள்
paddy damage
author img

By

Published : Dec 7, 2020, 3:27 PM IST

புரெவி புயல் தாக்கத்தினால் தொடர்ந்து பெய்து வரும் கன மழைக் காரணமாக திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பொியகுருவாடி, காாியமங்கலம், குலமாணிக்கம், விக்கிரபாண்டியம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சுமார் ஐம்பதாயிரம் ஏக்கருக்கு மேலாக தாளடி, சம்பா சாகுபடி ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 6 நாள்களுக்கு மேலாக பெய்து வந்த கன மழையினால் 6 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. வயல்களிலிருந்து தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் தவித்துவருகின்றனர்.

சேதநிலையில் பயிர்கள்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கடந்த ஆண்டு கோட்டூர் பகுதிகள் முழுவதும் ஆனைக்கொம்பன் நோயால் சம்பா பயிர்கள் முழுவதும் பாதிக்கபட்டு விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வந்த நிலையில், இந்தாண்டு புரெவி புயலால் பெய்த கன மழையால் பயிர்கள் முழுவதும் நீரில் முழ்கி சேதமைடைந்துள்ளன.

இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு குடிமராமத்து பணியை முறையாக செய்யவில்லை. மேலும் ஆறுகள், பாசன வாய்க்கால், வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாரத காரணத்தினால் தான் மழை நீர் வயல்களில் உள்ளே புகுந்துள்ளன.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு முறையாக நிவாரணமும், பயிர் காப்பீட்டுதொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வளிமண்டல சுழற்சியாக நிலை கொண்டுள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.