தமிழ்நாடு முழுவதும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புரெவி புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் பாதிக்கப்பட்ட காலனி வீடுகள், தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கும் சேதமடைந்த அனைத்து வகையான வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவான வரலாறு