ETV Bharat / state

’வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும்வரை போராடுவோம்’

author img

By

Published : Dec 6, 2020, 6:34 AM IST

திருவாரூர்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கொட்டும் மழையில் போராட்டும் கம்யூனிஸ்ட் கட்சியினர்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் ஒன்பது நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டில் உள்ள விவசாய சங்கங்கள் பல்வேறு கட்டங்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண மத்திய அரசு முன் வர வேண்டும் உள்ளிட்ட என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டன.

போராட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், ”மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் இல்லாமல் மூர்க்கத்தனமாக நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதா சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை இந்த போராட்டங்கள் ஓயாது.

தமிழ்நாடு முதலமைச்சர் தான் ஒரு விவசாயி என கூறி வருகிறார். விவசாயி என்பது உண்மையெனில், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த போராட்டங்கள் தொடர்ந்து நீடிக்கும்” என்றார்.

இப்போராட்டத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராசு, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் நா. பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.