ETV Bharat / state

பருத்தி கொள்முதல்: உழவர்களை அலைக்கழிப்பதாகக் குற்றச்சாட்டு - cotton sales down

நன்னிலம் அருகே ஒழுங்குமுறை வேளாண் விற்பனை மையத்தில் வியாபாரிகளின் பருத்தி மூட்டைகளைக் கொள்முதல் செய்துவிட்டு, உழவர்கள் அலைக்கழிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Cotton
பருத்தி கொள்முதல்
author img

By

Published : Jul 17, 2021, 4:37 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 17 ஆயிரம் ஹெக்டேர் ஏக்கர் பரப்பளவில் உழவர்கள் கோடை சாகுபடியான பருத்தி சாகுபடியில் ஈடுபடுகின்றனர். தற்போது பருத்தி எடுக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.

சிறு, குறு உழவர்கள் தனியார் முதலாளிகளிடம் விற்பனை செய்கின்றனர். மீதமுள்ள உழவர்கள் அனைவரும் நன்னிலம் அருகே கோட்டூரில் செயல்பட்டுவரும் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை மையத்தில் விற்பனை செய்துவருகின்றனர்.

வியாபாரிகளுக்கே முக்கியத்துவம்

இந்நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இடைத்தரகர்கள், வியாபாரிகள் கொண்டுவரும் பருத்தி மூட்டைகளை உடனே கொள்முதல் செய்துவிட்டு, உழவர்களின் பருத்தி மூட்டைகளைக் காலம் தாழ்த்தி கொள்முதல் செய்துவருவதாக உழவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒழுங்குமுறை வேளாண் விற்பனை மையத்தில் உழவர்கள் அலைக்கழிப்பு

இதன் காரணமாக, 10 நாள்களுக்கும் மேலாக பருத்தி மூட்டைகள் அடுக்கிவைத்து காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இச்சமயத்தில் அவ்வப்போது பெய்துவரும் மழையால் பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துவருகின்றன.

உழவர்கள் அலைக்கழிப்பு

லாபம் பெறும் நோக்கத்தோடு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள அலுவலர்கள் செயல்படுவதால் உழவர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டுவருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இவ்விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, உழவர்களின் பருத்தி மூட்டைகளை உடனடியாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பயனாளிகளுக்குத் தாலிக்குத் தங்கம் வழங்கிய அமைச்சர் பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.