ETV Bharat / state

திருவாரூரில் 2 மாத குழந்தை உள்பட 24 பேருக்குக் கரோனா உறுதி!

திருவாரூர்: மாவட்டத்தில் இன்று இரண்டு மாத குழந்தை உள்பட 24 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் இரண்டு மாத குழந்தை உள்ளிட்ட 24- நபர்களுக்கு கரோனா

author img

By

Published : Jul 6, 2020, 2:59 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 546 பேருக்குக் கரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மேலும் 24 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், திருவாரூர் ஆயுதப்படைக் காவலர் ஒருவருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோன்று வடபாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இரண்டு மாத குழந்தைக்கும், ஆதங்குடி பகுதியைச் சேர்ந்த மூன்று பேருக்கும், திருவாரூரை அடுத்த விளமல் பகுதியைச் சேர்ந்த எட்டு பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்கள் அனைவரும் சென்னையிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பு இருந்ததால் இவர்களுக்குத் தொற்று உறுதியாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.