ETV Bharat / state

கரோனா பாதித்த 3 பேர் குணமடைந்தனர் - மருத்துவக் கல்லூரி முதல்வர் - மருத்துவ கல்லூரி முதல்வர்

திருவாரூர்: கரோனா வைரஸ் பாதித்த மூன்று பேர் குணமடைந்துள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

corona three patient discharged from tiruvarur medical college hospital

author img

By

Published : Apr 12, 2020, 3:06 PM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்றிரவுவரை 969 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதில் திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் 13பேரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.

இந்நிலையில் மூன்று பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த இரண்டு பேரும் கோவில்வெண்ணி சேர்ந்த ஒரு நபரும் குணமடைந்துள்ளனர். மேலும் இவர்கள் 14 நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...தொற்று இருக்கா? இல்லையா? - கன்ஃபியூஸான அலுவலர்களின் அலட்சியத்தால் விழுப்புரத்தில் மாயமான டெல்லி இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.