ETV Bharat / state

23 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது -அமைச்சர் காமராஜ்!

author img

By

Published : Apr 3, 2020, 11:06 PM IST

திருவாரூர்: தமிழ்நாடு முழுவதும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

23 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது -அமைச்சர் காமராஜ்!
23 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது -அமைச்சர் காமராஜ்!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உணவுபாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூர் மாவட்டம் முழுவதும் வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய 2,261 பேர் மருத்துவக் குழுவினரின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பகுதியில் உள்ள 19 ஆயிரத்து 489 வீடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் 1083 கர்ப்பிணி பெண்கள் பிரசவிப்பார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

திருவாரூரில் இதுவரை ஏழு பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 33 பேர் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் 102 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று - அமைச்சர் வெளியிட்ட ட்வீட்டில் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.