ETV Bharat / state

சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையை ஈன்றெடுத்த கரோனா பாதித்த பெண்

திருவாரூர்: கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி, சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையை பிரசிவித்துள்ளார். குழந்தை கரோனா தொற்று இன்றி நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா மருத்துவப் பணியாளர்கள்
கரோனா மருத்துவப் பணியாளர்கள்
author img

By

Published : Jun 22, 2020, 5:17 PM IST

திருவாரூர் மாவட்டம், திருநெய்ப்போர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அம்மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது அவருக்கு சுகப் பிரசவம் நடைபெற்று, ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், அக்குழந்தைக்கு கரோனா தொற்று இல்லை என்றும், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தவிர, திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அம்மாவட்டத்தின் வடகண்டம் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவிக்கும், காரைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண், அவருடைய மூன்று மாத ஆண் குழந்தை உள்பட 12 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் திருவாரூர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 232ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 85 நாள்களாக ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிவரும் மனிதாபிமானி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.