கடந்த 24ஆம் தேதி டெல்லியில் நடந்த சமய மாநாட்டில் பங்கேற்றுவிட்டு வந்த திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபரை மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனால், திருவாரூரில் கரோனா பாதிப்பு 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரக்கூடிய புற நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து காணப்படுகிறது.
இதையும் படிங்க: புதுச்சேரிக்குள் வந்தால் நடவடிக்கை -முதலமைச்சர் நாராயணசாமி