சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று பரவல் உலக நாடுகளை ஆட்கொண்டுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாட்டில் இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பலர் மீறுகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 3,115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 3,144 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,943 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...சென்னையில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு!