திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே நன்னிமங்கலத்தைச் சேர்ந்த நபர் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்கி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நன்னிமங்கலத்தைச் சேர்ந்தவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் சென்னை துறைமுகத்தில் டிரைவராக வேலை பார்க்கும் நபர் ஒருவரின் மூன்று வயது குழந்தைக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது திருவாரூரில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குழந்தையின் பெற்றோருக்கு கரோனா தொற்று இல்லை. குழந்தைக்கு ஏதேனும் மருத்துவமனைக்கு சென்றபோதா அல்லது வெளிநபர்கள் குழந்தையைத் தூக்கும்போது ஏற்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
தற்போது குழந்தை உட்பட இருவருக்கும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: