திருவாரூரில் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால், வலங்கைமான் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியை கரோனா வார்டாக மாற்றப்பட்டு அங்கு 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இதேபோன்று, திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருவிக அரசு கலைக்கல்லூரி, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களிலும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
திருவாரூரில் அதிகரிக்கும் கரோனா... ஒரு வயது குழந்தை உள்பட 118 பேர் பாதிப்பு! - திருவாரூர் கொரோனா பாதிப்பு
திருவாரூர்: ஒரு வயது குழந்தை உள்பட 118 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,666 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா
திருவாரூர் மாவட்டத்திலும் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,548 ஆக இருந்த நிலையில், இன்று (ஜூலை29) மேலும் 118 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,666 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் திருவாரூரைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும், வலங்கைமானில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 6 நபர்களுக்கும், குடவாசலில் கணவன்- மனைவி இருவருக்கும், சன்னாநல்லூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி, ஐந்து வயது மகன் உள்ளிட்ட மூன்று நபர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.