உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இதுகுறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பழையங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கோகிலம் சங்கர் தலைமையில் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம் ஊராட்சி மன்ற அலுவலகம், மீன் சந்தை, கோயில்கள், பேருந்துகள் ஆகிய இடங்களில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும் வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்வதற்கு சோப்புகள் வைக்கப்பட்டு, கை கழுவும் வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்காத்து கொள்ளும் வழிமுறைகளை ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யும் வசதிகளும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் செய்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் ராஜா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாலா , பழையங்குடி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், மக்கள் பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனாவை ஆயுதங்களால் எதிர்க்க முடியாது - மோடிக்கு ஆதரவு குரல் கொடுத்த சிதம்பரம்