மத்திய அரசின் தவறான கொள்கையால் பொருளாதாரச் சீரழிவு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டம் புதிய ரயில் நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பணமதிப்பிழப்பு போன்ற தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பொருளாதாரக் கொள்கையால் நிலவிவரும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவைகள் குறித்தும் மத்திய அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிக்க: இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மிலாடி நபி வாழ்த்து!