நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தேத்தாகுடி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் மலர்கொடி. இவருக்கு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆலிவலம் கிராமத்தில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இவரது நிலத்தை கடந்த சில வருடங்களாக ஆலிவலம் கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் குத்தகை சாகுபடி செய்து வந்துள்ளார்.
இந்த ஆண்டு முதல் வயல் உரிமையாளரான மலர்கொடியே பயிர் செய்து கொள்வதாக கூறி தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமநாதன், சென்ற மாதம் டிராக்டர் கொண்டு நெற்பயிர்களை சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் மலர்கொடி பயிர்களை நடவு செய்து பராமரித்து வந்தநிலையில், நேற்று இரவு ராமநாதன் நடவு செய்யப்பட்ட பயிரில் களைக்கொல்லி மருந்தை தெளித்து நெற்பயிர்களை கருக செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆலிவலம் காவல் நிலையத்தில் மீண்டும் ராமநாதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மலர்கொடி புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 'நான் மாணவிகளை குழந்தையாக பார்த்து வருகிறேன்' - நீதிபதி முன்பு மயங்கி விழுந்த நிர்மலா தேவி!