ETV Bharat / state

ஊதிய நிலுவை; கல்லூரிப் பேராசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்! - திருவாரூர் அண்மைச் செய்திகள்

ஐந்து மாத காலமாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து, நன்னிலம் கல்லூரிப் பேராசிரியர்கள் கைக் குழந்தைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடர்பான காணொலி

author img

By

Published : Oct 20, 2021, 9:22 PM IST

திருவாரூர்: நன்னிலத்தில் அரசு கல்லூரியாக மாற்றப்பட்ட, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு அறிவியல் கல்லூரியில் சுமார் 60 கவுரவப் பேராசிரியர்கள், 8 அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பலமுறை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இருப்பினும், கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோருக்குப் பல்கலைக்கழகமே ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்லூரிப் பேராசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பான காணொலி

கைக்குழந்தையுடன் போராட்டம்

அரசின் உத்தரவை ஏற்று, அனைத்து பல்கலைக்கழகமும் ஊதியம் வழங்கி வரும் நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மட்டும் உறுப்புக் கல்லூரி ஊதியர்களுக்கு ஊதியம் வழங்குவதில்லை.

இந்நிலையிலேயே ஊதியம் வழங்காத பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைக் கண்டித்து, கல்லூரிப் பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்திற்குள் கைக் குழந்தைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 22 வயதில் பஞ்சாயத்து தலைவர் பதவி - என்ன செய்ய போகிறார் ஸாருகலா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.