இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகளை அரசு மானியத்துடன் வழங்க திருவாரூர் மாவட்டத்திற்கு ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழவன் செயலியில் பதிவுசெய்து மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in மூலம் விவசாயிகள் மானியம் பெற்றுக்கொள்ளலாம். ஒரு நிதியாண்டில் இரண்டு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கிட இயலும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மதுரையில் மலைபோல் குவியும் மருத்துவக் கழிவுகளால் துர்நாற்றம்!