திருவாரூர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு வீசிய கஜா புயலால், பொதுமக்கள் தங்களுக்குச் சொந்தமான வீடுகள்,கால்நடைகள்,தென்னை மரம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அப்போது அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
![திருவாரூர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-01-coconut-former-petition-7204942_22072019140138_2207f_1563784298_830.jpg)
இதனால் இன்று சுமார் 50-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் மனு அளித்தனர்.
மேலும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அடிப்படை ஆவணங்களான ரேசன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாக எச்சரித்துள்ளனர்.