ETV Bharat / state

‘அதிமுகவினர் ஸ்டாலினை விட நூறு மடங்கு காட்டமானவர்கள்’ - அமைச்சர் காமராஜ் - minister kamaraj press meet

திருவாரூர்: திமுக தலைவர் ஸ்டாலினை விட நூறு மடங்கு காட்டமாக விமர்சித்துப் பேச அதிமுகவினருக்கு தெரியும் நாகரீகம் கருதி அமைதி காக்கிறோம் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

minister kamaraj
author img

By

Published : Nov 17, 2019, 10:06 PM IST

முதலமைச்சரின் மக்கள் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 681 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் அவற்றில் 13 ஆயிரத்து 178 மக்களின் மனுக்கள் தகுதியானவைகளாக தேர்வு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 4 ஆயிரத்து 534 பயனாளிகளுக்கு 96 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ‘வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் மூன்று மாதத்திற்கு தேவையான பத்து லட்சம் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பில் உள்ளன. மண்ணெண்ணெய் தேவை அதிகரித்திருப்பதால் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள 'ஒரே நாடு ஒரே சம்பள நாள்' திட்டத்தை அதிமுக வரவேற்கிறது. இதுபோன்ற நல்ல திட்டங்களை வரவேற்பதில் தவறில்லை' என்று தெரிவித்தார்.

அமைச்சர் காமராஜ் பேட்டி

இதனிடையே, கோட்டையில் உள்ள அமைச்சர்கள் கொள்ளையர்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய கருத்து குறித்த கேள்விக்கு, ‘ஸ்டாலின் தெரிவித்த கருத்தை விட நூறு மடங்கு காட்டமாக பதில் சொல்லக் கூடியவர்கள் அதிமுகவினர். அரசு நிகழ்ச்சி என்பதால் அரசியல் நாகரீகம் கருதி உண்மையை நிலை நிறுத்தி தேவையான நேரத்தில் இதற்கான பதிலை தெரிவிப்போம்’ என்றார்.

Intro:

Body:திமுக தலைவர் ஸ்டாலினை விட நூறு மடங்கு காட்டமாக விமர்சித்துப் பேச அதிமுகவினருக்கு தெரியும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூரில் பேட்டி.

முதலமைச்சரின் மக்கள் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 25,681 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் அவற்றில் 13178 மக்கள் தகுதியானவைகளாக தேர்வு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 4,534பயனாளிகளுக்கு ரூபாய் 96.60 இலட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் தெரிவித்ததாவது, வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் மூன்று மாதத்திற்கு தேவையான பத்து லட்சம் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பில் உள்ளது. மண்ணெண்ணெய் தேவை அதிகரித்திருப்பதால் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது அதனடிப்படையில் மண்ணெண்ணெய் அளவை உயர்த்தி வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒரே நாடு ஒரே சம்பள நாள் திட்டம் பயனுள்ளது. இதனை வரவேற்பதாகவும், நல்ல திட்டங்களை வரவேற்பதில் தவறில்லை எனவும் கூறினார். மேலும் கோட்டையில் உள்ள அமைச்சர்கள் கொள்ளையர்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய கருத்து குறித்த கேள்விக்கு? ஸ்டாலின் தெரிவித்த கருத்தை விட 100 மடங்கு காட்டமாக பதில் சொல்லக் கூடியவர்கள் அதிமுக-வினர். அரசு நிகழ்ச்சி என்பதால் அரசியல் நாகரீகம் கருதி உண்மையை நிலை நிறுத்தி தேவையான நேரத்தில் இதற்கான பதிலை தெரிவிப்பதாக கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.